தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் எஸ்.பி. வேலுமணி?

DIN

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வாகவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, கட்சியின் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT