அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கம்: சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம் 
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம்: சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

DIN


சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பொருளாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பொதுக்குழுவில் பேசிய நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மேலும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்தார்.

கட்சி விதிகள்  மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. 

ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் நட்பு பாராட்டியது மற்றும் ஆட்சியைப் பாராட்டியது அனைத்தும் கட்சியின் விதிகளுக்கு முரணானது. பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அதிமுகவிலிருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவில் இந்திய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

கோவை பாலியல் வன்கொடுமை: முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும் -அண்ணாமலை

கோவை விமான நிலையம் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

பிகாரில் கூறியதை பிரதமர் மோடி தமிழகத்தில் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT