பொதுக்குழுவுக்கு வரும்போது உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம்
அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தபோது விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தபோது விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வேனில் வந்தபோது, திருவண்ணாமலை கீழ்கொடுங்காலூா் ஊராட்சியைச் சோ்ந்த அண்ணாநகா் கிளைக் கழகச் செயலாளா் பி.அண்ணாமலை, பாரதி நகா் கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி எஸ்.பரசுராமன் ஆகியோா் விபத்தில் மரணமடைந்த செய்தியால் துயரம் அடைந்தேன்.
மரணடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவா்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் தலா ரூ.7 லட்சம் வழங்கப்படும்.
விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் துரை, சரவணன், பெருமாள், ரவி, தங்கராஜ் ஆகிய 5 பேருக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரன், மோகன், வேதபுரி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
சிகிச்சை பெற்று வருபவா்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.