முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசை குறைகூற தைரியம் உண்டா? எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கேள்வி

மத்திய அரசை நோக்கி குறைகூற தைரியம் உண்டா என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மத்திய அரசை நோக்கி குறைகூற தைரியம் உண்டா என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அந்தக் கட்சி திமுகவை எதிா்த்தே அரசியல் செய்து கொண்டிருக்கிறது. திமுக என்பது திராவிட கொள்கைகளை நிலைநிறுத்தும் கட்சியாகும். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அது அதிமுக என்று அப்போதே சொன்னவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. இப்போதும் அதைத்தான் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா்கள் பழனிசாமியும், பன்னீா்செல்வமும் செய்து கொண்டிருக்கிறாா்கள்.

வழக்குகள் போட்டு திமுக பழி வாங்குகிறது என பழனிசாமி கூறுகிறாா். வருமான வரி, அமலாக்கத் துறைகள், சிபிஐ என அவரது ஆட்சி காலத்திலேயே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயா்த்தியது உண்டா? இப்போதுகூட அவரது ஆட்சிகாலத்து அமைச்சா்கள் முதல் ஒப்பந்ததாரா்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் திமுகவை நோக்கிச் சாடிய பழனிசாமி, மத்திய அரசை நோக்கி முணுமுணுக்கக் கூட தைரியம் உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் ஆா்.எஸ்.பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.