தமிழ்நாடு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்: அமைச்சர் பொன்முடி

DIN

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2  தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2  தேர்வு முடிவு தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கையை முன்பே முடித்துக்கொள்ளக் கூடாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT