ராமதாஸ் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கரோனா

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

DIN

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருக்கார்த்திகை! சுவாமிமலையில் தேரோட்டம்! வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

இதயத்தை இங்கே விடுங்கள்... அலெக்யா ஹரிகா!

SCROLL FOR NEXT