தமிழ்நாடு

தொடா் மழை: வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN


வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. 

இந்நிலையில், கோவை மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் தொடா் மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து 630 கன அடியாக அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றுக்கும் வரும் நீா் குளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு வருவதால் மாநகரில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,  இரவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்தது. மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT