முகப்பு
தமிழ்நாடு

கல்வியும், மருத்துவமும் அரசின் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கல்வியும், மருத்துவமும் அரசின் இரண்டு கண்கள் என காமராஜர் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: கல்வியும், மருத்துவமும் அரசின் இரண்டு கண்கள் என காமராஜர் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் மேலும் தெரிவித்ததாவது:
 
தரமான கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்.

போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.    
 

முழு கட்டுரையைப் படிக்க →