தமிழ்நாடு

பள்ளி மாணவி மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி  மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். அவர் இதனை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திர பாபு பேசியதாவது: “ பள்ளிக்கூடத்தை தாக்கியது என்பது தனி வழக்கு. அது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தை முன்கூட்டியே கணித்ததால் தான் டிஐஜி தலைமையில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டனர். இந்த வன்முறையினை எந்த வித உயிர்ச் சேதமும் இல்லாமல் காவல் துறை திறம்பட கையாண்டுள்ளது.  சட்டவிரோதமாக கூடியது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது மற்றும் காவல் துறையினரைத் தாக்கியது போன்ற பிரிவுகளில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்ட மற்றவர்களும்  கைது செய்யப்படுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி இணைந்து சந்தித்தனர். 

உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி கூறுகையில், ஒரு பள்ளியில் நடந்த அசாம்பாவிதத்திற்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது எனக் கூறுவது சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். மேலும், வதந்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT