பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ஆலமரத்து அம்மன் கோயில் முன்பு உள்ள ஆலமரத்தில் பால் வடிந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் ஆலமரத்தை வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் ஆலமரத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆண்டுதோறும் பூவோடு எடுத்தும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை தீபம் ஏற்றி ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்து வருகின்றனர்.
பால் வடியும் ஆலமரம்
இந்நிலையில், ஆலமரத்து அம்மன் கோயிலில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகம் செய்து ஆலமரத்தில் தீபம் காண்பிக்கும் பொழுது மரத்தின் மேல் இருந்து பால் வடிந்தது.
தகவல் அறிந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் ஆலமரத்தை வழிபாடு செய்தனர். ஆலமரத்தில் பால் வடியும் காட்சி அப்பகுதிகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.