சென்னை: போராட்டம் பரவலாம் என்று வந்த புரளியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் 2 வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 -ஆம் தேதி விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற 5-ஆம் நாள் போராட்டத்தில் பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரா்கள், பள்ளி வாகனங்களை தீயிட்டு எரித்தனா். பள்ளி அலுவலகத்தை சூறையாடினா்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் புரளி பரவி வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.