முகப்பு
தமிழ்நாடு

கூடலூரில் மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

கூடலூரில்  மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு  துணி கட்டி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

கூடலூரில்  மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு  துணி கட்டி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கூடலூரில்  எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக பழைய பேருந்து நிலையம்  மற்றும் கிழக்கு மெயின் பஜார் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. 

நகரத்  துணைத்தலைவர் கான் அப்துல் கபார்கான்  தலைமையில், 

மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா  முன்னிலையில், சபீர் கான்  வரவேற்றார். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தலைவர் எம்.எம்.அஜ்மீர் கான், தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொது செயலாளர் கம்பம் சாதிக் அலி ஆகியோர் நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை தடுக்கும் சட்டம் இயற்றிய மத்திய அரசைக் கண்டித்துப் பேசினர், 

நகரச் செயலாளர் காதர் மைதீன்  நன்றி கூறினார், வாயில்  கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேலானவர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.