தமிழ்நாடு

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே அரசின் இலக்கு:  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளார்களிடம் தெரிவித்ததாவது:

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அனுப்படும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் தயாரான   பதிலுக்கு, முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெருவோம்.

முதல்வர் ஒப்புதல் தந்த பிறகு மத்திய அரசுக்கு நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அனுப்பப்படும் மற்றும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும். 

மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT