முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 
தமிழ்நாடு

குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT