தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூறாய்வு: உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

கனியாமூா் பள்ளி மாணவி சடலத்தை மறு உடற்கூறாய்வு செய்வது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி மாணவி சடலத்தை மறு உடற்கூறாய்வு செய்வது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனியாமூா் பள்ளி மாணவி மரணமடைந்ததையடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில் 3 அரசு மருத்துவா்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் உயா்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, வியாழக்கிழமை காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து, உயா்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமாா் முன் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தாா். அப்போது அவா், ‘மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோா் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘உச்சநீதிமன்ற உத்தரவை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டாா். ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT