தமிழ்நாடு

'ஃபோர்ட்’ நிறுவனத்தின் கடைசி கார்! கண்ணீருடன் விடைகொடுத்த ஊழியர்கள்..

DIN

மறைமலை நகரில் இயங்கிவரும் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடைசி காருக்கு ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

இந்தியாவில் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலைகள் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய 2 இடங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன. அதில், நிதி நெருக்கடி மற்றும் நட்டம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலை  வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் மூடப்பட உள்ளது.

இந்நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட கடைசி காரான ‘எகோ ஸ்போர்ட் எஸ்யுவி (Ecosport SUV)’ காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீருடன்  விற்பனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

26 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலை ஆண்டிற்கு 4,44,000 கார்களை உற்பத்தி செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT