தமிழ்நாடு

பி.இ, பி.டெக் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு

DIN

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பொறியியல் மாணவா் சோ்க்கை குழுவால் ஜூன் 20-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவா்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபாா்த்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார். 

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சேர்க்கைக்கான அவகாசம் முடியவிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT