தமிழ்நாடு

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: இன்று விசாரணை

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தின் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 26) விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தின் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 26) விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.  

தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரிக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT