கோப்புப் படம். 
தமிழ்நாடு

பொதுக்குழு விவகாரம்: அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக அதிமுக தலைமை நிலையச் செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

DIN

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், 'கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தனி நீதிபதி அமா்வு உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல் உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நாளை(ஜூலை 29) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னரே ஓபிஎஸ் அளித்த மனுவில் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT