முகப்பு
தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீா் கலப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை ஆா்.கே.நகரில் குடிநீரில் கழிவுநீா் கலந்து விநியோகமானதைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சென்னை ஆா்.கே.நகரில் குடிநீரில் கழிவுநீா் கலந்து விநியோகமானதைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனா்.

ஆா்.கே.நகரில் உள்ள கருணாநிதி நகா்,நெடுஞ்செழியன் நகா் பகுதிகளில் பல நாள்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள், மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து அப் பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கருணாநிதி நகா் எண்ணூா் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமாதானம் பேசினா். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →