தமிழ்நாடு

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமா் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.

DIN



அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் அந்த விழாவில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

அவருடன் ஆளுநரும், வேந்தருமான ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்கவுள்ளனா்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவா்களுக்கு பிரதமா் மோடி பதக்கங்கள் வழங்கவுள்ளாா். விழாவில் பிரதமா் பங்கேற்பதால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த விழா மூலம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளைச் சோ்ந்த 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுவாா்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT