தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( ஜூன் 2) பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 2) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த மழையை பொருத்தவரை, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( ஜூன் 2) பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 3: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூன் 3-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 4, 5: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 -40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
கேரளம், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.