முகப்பு
தமிழ்நாடு

‘சோனியா காந்தி விரைவில் நலமடைய வாழ்த்துகிறேன்’: முதல்வர் ஸ்டாலின்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விரைவில் நலமடைய வாழ்த்துவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜூன், 2022 at 11:51 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விரைவில் நலமடைய வாழ்த்துவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற அவரது மகள் பிரியங்கா காந்தி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தில்லி திரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் சோனியா காந்திவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திருமதி சோனியா காந்தி விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன். தொற்று முழுமையாக நீங்காமல் இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.