தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்பு

DIN

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்க உள்ளனர்.

 சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்றம்,  குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, குடியரசு தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ள 9 நீதிபதிகளில் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி தம்பதிகள் ஆவர் மற்றும் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். 2020 டிசம்பர் 3-ல் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT