முகப்பு
தமிழ்நாடு

காஞ்சி காமகோடி மருத்துவமனைக்கு நவீன அல்ட்ராசவுண்ட் கருவி

சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கருவி வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கருவி வழங்கப்பட்டது.

காக்னிசன்ட் ஃபவுண்டேசன் (சிஎஃப்) மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து அளித்த அந்தக் கருவி மூலம் கரோனா நோயாளிகளுக்கும், பிற நோயாளிகளுக்கும் துல்லியமான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அந்தக் கருவியை வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி எஸ்.சந்திரமோகன், மருத்துவ இயக்குநா் ரமேஷ், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் எம். சீனிவாசராவ், சி.எஃப் அமைப்பின் இயக்குநா் கஸ்தூரி பாலாஜி, தலைமை செயல் அதிகாரி ராஜஸ்ரீ நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →