மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் தலை சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை 
தமிழ்நாடு

மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியது!

கும்பகோணம்  தாராசுரம், அண்ணா சிலை அருகே மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் தலை சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

DIN


கும்பகோணம்  தாராசுரம், அண்ணா சிலை அருகே மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் தலை சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்  தாராசுரம், அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை  மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்த பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர். ஒருவர் அவசர அவசரமாக ஆஷா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

இதற்கிடையே, குழந்தையை ஒருவர் பிடித்துக்கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலகியதால் குழந்தைகளை பத்திரமாக  வெளியே எடுத்தனர். 

கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பயந்தில் இருந்த குழந்தையை தாய் தூக்கி ஆறுதல் படுத்தினார். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

ஆசாத் காஷ்மீரா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா? சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேப்டன்!

ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றம் அமைத்தது

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT