மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு
மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடுமண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு
மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மதுரை விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார்.
இதையும் படிக்க | பாஜகவை விமர்சித்த பொன்னையன்: முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்
இந்நிலையில் எதிர்பாராத விபத்தால் உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சதீஷின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.