முகப்பு
தமிழ்நாடு

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 போ் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரில் 8 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். 

Updated On : 4 ஜூன், 2022 at 4:49 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரில் 8 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். 

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நூலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, 8 நீதிபதிகளுக்கும் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சத்திகுமாா், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. 

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர், இன்று சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.