முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி?

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
பகிர்:

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றிகரமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, கரோனா பெருந்தொற்று காரணமாகவும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும், இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேர்ச்சி பெற கல்வியாண்டின் அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் எழுதினாலே போதுமானது எனவும், இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து தனித்தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →