மகனின் துயர முடிவால் ராமேஸ்வரம் கடலில் குதித்து தற்கொலை செய்த பெற்றோர்
வயதான தம்பதி, ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்: தங்களது மகன் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அவரது பெற்றோர், ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த மூத்த தம்பதி, ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் வயது 62 என்றும், மனைவியின் வயது 59 என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு இவர்களது மகன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சோகத்தில் இருந்த இருவரும் இன்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
Advertisement
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, முதியவர்கள் இருவரும் தங்களது உறவினர்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு குறித்து தெரிவித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.