முகப்பு
தமிழ்நாடு

கோவையில் ரூ.290 கோடியில் 2 புதிய மேம்பாலங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவையில் ரூ.290 கோடியில் கட்டப்பட்ட 2 புதிய மேம்பாலங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

கோவையில் ரூ.290 கோடியில் கட்டப்பட்ட 2 புதிய மேம்பாலங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு சாலை உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் நெடுஞ்சாலைத் துறையின் முக்கியப் பணிகளாகும். நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பை தமிழக அரசு சிறந்த முறையில் உருவாக்கி பராமரித்து வருகிறது.

ரூ.230 கோடியில்...: அந்த வகையில், கோவையில் ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் நான்கு வழித்தட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி வழியாக தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதன்மூலம், கோவையின் பிரதான ஆறு சந்திப்புகளுக்கு இடையே போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். விபத்துகளை தவிா்க்கவும், வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதும் தவிா்க்கப்படும். மேலும், சிங்காநல்லூரில் இருந்து அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், நகா்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாகச் செல்ல முடியும்.

ரூ.60 கோடியில்...: இதேபோல, கோயம்புத்தூா் நகரம் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் முதல்வா் திறந்தாா். இந்தப் பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை, கூடலூா், மைசூா் செல்லும் வாகனங்கள் எளிதாகச் செல்ல முடியும். இந்த நிகழ்வில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →