திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. 
தமிழ்நாடு

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

DIN

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் விழா பத்து நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஒன்பதாம் நாளான சனிக்கிழமை காலை திருத்தேர் விழா நடைபெற்றது.

முன்னதாக, வீரட்டானேஸ்வரர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது, பின்னர், சுவாமி அம்பாள் தேரில் ஏற்றி மாட வீதி வலம் வந்தனர். அம்மன் பெரியநாயகி தேர் முன்செல்ல வீரட்டானேஸ்வரர் பெரிய தேர் பின்தொடர்ந்து வந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க சிலம்பம் வீரர்கள் ஆட்டத்துடன் தேர் திருவிழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்றத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அதிமுக அமைச்சர் எம். சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

2 சக்கர வாகன விற்பனை: 4-ஆவது இடத்தில் தமிழ்நாடு

இந்த நாள் நல்ல நாள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

SCROLL FOR NEXT