தமிழ்நாடு

காட்பாடி மாநகராட்சி மண்டல அலுவலக சுவற்றில் கல்லூரி மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள்

DIN

காட்பாடி மாநகராட்சி மண்டல அலுவலக சுவற்றில் கல்லூரி மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் சுமார் 25 பேர் ஒருங்கிணைந்து சுத்தமான இந்தியா மற்றும் நீரை சேமிப்போம் என்ற தலைப்பில் காட்பாடி தாராபடவேடு பகுதியிலுள்ள ஒன்றாவது மண்டல அலுவலக வாயில் சுவர்களில் ஒட்டபட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், தேவையற்ற விளம்பரங்களை அப்புறபடுத்தி, அங்கிருந்த குப்பைகளையும் சுத்தம் செய்தனர்.

அரசு அலுவலக சுவற்றில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியங்கள்.

பின்னர், அந்தச் சுவற்றில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பதின் அவசியம், தண்ணீர் சேமிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.

அரசு அலுவலக சுவற்றில் விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை அழகுடன் மாணவிகள் வரைந்துள்ளது வரவேற்ப்பை பெற்றதோடு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அரசு அலுவலக சுவற்றில் விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை அழகுடன் மாணவிகள் வரைந்த கல்லூரி மாணவிகள்.


இதுகுறித்து மாணவிகள் கூறும் பொழுது, தாங்கள் அனைவரும் சேர்ந்து மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைய உள்ளதாக தெரிவித்தனர். இதுபோன்று பல்வேறு வகைகளில் சமுதாயப்பணியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT