முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.10 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 12 ஜூன், 2022 at 8:54 AM
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில்  மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,753 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 4,190 கனஅடியாக குறைந்துள்ளது.

Advertisement

நீர்வரத்து குறைந்து வருவதால் சனிக்கிழமை காலை 114.57அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 84.37 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.