கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது.
நீதிமன்றக் கட்டடத்திற்குள் வழக்குத் தொடுப்பவர்கள் அவசியமின்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தின் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
உள்ளே நுழைபவர்களுக்கு கட்டாயம் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் கைத் திரவம் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிகம் கூடுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.