தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்த, திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவள்ளி சுப்பிரமணி மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து ஆகிய
மூன்று பெண் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.

இதில், மூன்று பயணிகளும் தங்களது உடலில் தலா 100 டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் (அமெரிக்க டாலர்)மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.34.76 லட்சம் ஆகும். மேலும் இதுதொடர்பாக சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT