தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றவர்களின் எத்தனை பேர் தெரியுமா?

DIN

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9,12,620 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 4.27 லட்சம்(94.38%) பேர் மாணவிகள், 3.94 லட்சம் (85.83%) பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பாடங்களிலும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

100க்கு 100 மதிப்பெண் விவரம்:
தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் 45 பேரும், கணக்கு பாடத்தில் 2,186 பேரும்,  அறிவியல் பாடத்தில் 3,841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதம், அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 97.15 சதவீதம், விருதுநகர் 95.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT