தமிழ்நாடு

சிறுவாணி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க சிறுவாணி அணையிலிருந்து போதிய நீரை திறந்துவிட்ட கேரள முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க சிறுவாணி அணையிலிருந்து போதிய நீரை திறந்துவிட்ட கேரள முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று (19-6-2022) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார். 
மேலும், கேரள முதல்வர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை இன்று (20.6.2022) உடனடியாக திறந்துவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் இன்று (20.6.2022) கேரள முதல்வரை தொலைபேசி
வாயிலாக தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT