தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: இன்று பிற்பகலில் விசாரணை

DIN

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், எதிர்தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT