கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை: உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் செல்வோம்: ஓ.பி.எஸ். தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்ல மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

DIN


அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்ல மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு போகவேண்டிய நேரத்தில் கட்டாயம் போவோம் எனவும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாகியுள்ளது. 
ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருகின்றனர். 

இந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பல்வேறுகட்டங்களாக தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளிலும் இபிஎஸ் தரப்பினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும், பாதுகாப்பு தரக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு எழுத்துப்பூர்வமாக மனு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

ஆனால், உள் அரங்கில் கூட்டம் நடப்பதால், பொதுக்குழு கூட்டம் நடத்தும் விவகாரத்தில் தலையிட முடியாது என ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்து, ஓபிஎஸ் தரப்பு மனுவை நிராகரித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்ல மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு போகவேண்டிய நேரத்தில் கட்டாயம் போவோம் எனவும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT