மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 7,905 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் தொடா் மழை பெய்து வருவதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
மேட்டூர்: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் தொடா் மழை பெய்து வருவதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 6,922 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 7,905 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சாதிக்கத் தடை இல்லை...!
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 109.29 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை109.02 அடியாக சரிந்தது.
அணையின் நீர் இருப்பு 77.02 டி.எம்.சியாக உள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக-கா்நாடக எல்லையான பிலுகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.