முகப்பு
தமிழ்நாடு

தவறுமேல் தவறு செய்கிறார் ஓ.பி.எஸ்.: ஜெயக்குமார் கண்டனம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
ஜெயக்குமார் (கோப்புப் படம்)
பகிர்:

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்டது. அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட வேண்டும். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற கவலையை ஓபிஎஸ் தரப்பினருக்கு சொல்லிக்கொள்கிறேன். அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்படி என்ன அராஜகம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார்.

சென்னையில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து நாளை தெரியவரும் எனக் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →