தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நாளைமுதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று பொதுத் துறை துணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு
இந்நிலையில், பொதுத் துறை துணைச் செயலாளர் எஸ். அனு வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகத்தில் புதிய வகையான கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளபடியாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24.06.2022 முதல் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.