மாற்றுப் பாதையில் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வந்த வாகனம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியதில், மாற்றுப் பாதையில் அவரது வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னை: அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வந்த வாகனம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியதில், மாற்றுப் பாதையில் அவரது வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் வந்துவிட்டதாகவும், அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருந்தது. ஆனால் மண்டபம் அமைந்திருக்கும் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மண்டபத்துக்கு வர தாமதமானதால் பொதுக் குழு 11 மணிக்குத் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் முதலில் கிளம்பினார். பிறகுதான் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார். ஆனால், வாகன நெரிசல் ஏற்பட்டதும் ஓபிஎஸ் உடனடியாக மாற்றுப் பாதையில் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.
ஓ. பன்னீர்செல்வம், ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்த போது, ஒற்றைத்தலைமை வேண்டும் தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.