தில்லி விரையும் ஓ. பன்னீர்செல்வம்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று இரவு தில்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று இரவு தில்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் இன்று காலை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்ததுடன் ஜூலை 11இல் மீண்டும் பொதுக்குழுக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பார் என்ற்உ அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் கைது: அவரே விளக்கும் காரணம்
இந்நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது குறித்து இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் நிலையில், இரவு 9 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்லவுள்ளார்.
இதையும் படிக்க | மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?
இருப்பினும், தில்லியில் நடைபெறவுள்ள தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது மகன் ரவிந்தரநாத், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் செல்வதாகவும் கூறப்படுகிறது.