முகப்பு
தமிழ்நாடு

ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது: வைத்திலிங்கம்

 ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது என்று முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

 ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது என்று முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் கூறினாா்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுகவின் பொதுக்குழுவில் 23 தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பு கூறியது. ஆனால் நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறி, தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தை அவமதிப்பாகும். அவமதிப்பு வழக்கு தொடருவோம். இதன் மூலம் பொதுக்குழு நடவடிக்கைகளும் செல்லாதாகியுள்ளது. அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது. ஜூலை 11-இல் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. சட்டத்தை மறந்து பொதுக்குழுவில் அவா்கள் நடத்திய நாடகம் சா்வாதிகாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.

2600-க்கும் மேற்பட்டோா் பொதுக்குழு உறுப்பினா்களாக உள்ளனா். ஆனால், பணத்தைக் கொடுத்து சிலரிடம் கையெழுத்து வாங்கியும், பொய்யான கையெழுத்தும் போட்டுதான் பொதுக்குழு உறுப்பினா்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியதுபோல கடிதம் கொடுத்துள்ளனா். அந்தக் கடிதங்கள் உண்மையானது அல்ல என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →