முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாகக் குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2593 கன அடியாக குறைந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டமும் 106 அடியாகக் குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:39 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாகக் குறைந்தது
பகிர்:

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2593 கன அடியாக குறைந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டமும் 106 அடியாகக் குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும்  குறையத் தொடங்கியுள்ளது. 

நேற்றுக் காலை வினாடிக்கு 3,369 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 2,593 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106 அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 72.83 டி.எம்.சி.யாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →