முகப்பு
தமிழ்நாடு

பூவிருந்தவல்லி திமுக நகரச் செயலர் இடைநீக்கம்

பூவிருந்தவல்லி திமுக நகரச் செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பூவிருந்தவல்லி திமுக நகரச் செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் எம். ரவிக்குமார், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
திமுக அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவி போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.