தமிழ்நாடு

வெளியுறவுத் துறை அமைச்சரை நாளை(மார்ச்-5) சந்திக்கிறது தமிழக சிறப்புக் குழு

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக நாளை(மார்ச்-5) வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழக சிறப்புக் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது

மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் இக்குழுவில் திருச்சி சிவா(எம்.பி) , கலாநிதி வீராச்சாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகிய எம்பி, எம்எல்ஏ-களுடன் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள 2223 தமிழக மாணவர்களில் இதுவரை 193 பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக நாளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக சிறப்புக் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

இச்சந்திப்பில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் நிலை மற்றும் அவர்களை உடனடியாக மீட்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT