தமிழ்நாடு

சீர்காழியில் போலீசார், மாணவர்களின் மிதிவண்டி விழிப்புணர்வு பயணம்

மிதிவண்டி ஓட்டுதல் அவசியம் குறித்தும் சீர்காழி டி.எஸ்.பி லாமெக் தலைமையில் போலீசார் மிதிவண்டி ஓட்டி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

DIN

சீர்காழி: பொதுமக்கள் காலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்தியும், மிதிவண்டி ஓட்டுதல் அவசியம் குறித்தும் சீர்காழி டி.எஸ்.பி லாமெக் தலைமையில் போலீசார் மிதிவண்டி ஓட்டி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த மிதிவண்டி பயணத்திற்கு சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமை வகித்தார்.

இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், அமுதாராணி, நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி மற்றும் 80-க்கும் மேற்பட்ட போலீசார் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிதிவண்டி பயணத்தில் பங்கேற்று சீர்காழி சட்டநாதபுரம், தென்பாதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மணிகூண்டு , கொள்ளிடமுக் கூட்டு , புறவழிச்சாலை வழியாக சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT